மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கோயம்புத்தூர்

வடவள்ளி

மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மருதமலை அடிவாரம்

கோவை மருதமலை முருகன் ேகாவில் அடிவாரத்தில் சாலையில் இரு புறங்களிலும் பொம்மை கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ேதவையான பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.

இதேபோல் சாமி தரிசனம் முடித்து விட்டு வந்து, அடிவாரத்தில் உள்ள பொம்மை கடைகளில் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகள், விளையாட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இதுதவிர விழாக்காலங்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள். இதனால் மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

கடைகள் அனைத்தும் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரதி, சாலை ஆய்வாளர் ஜாய்சுகன்யா மற்றும் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை முன்னிலையில் நடந்தது.


Next Story