கீழ்கொடுங்காலூரில் நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கீழ்கொடுங்காலூரில் நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கீழ்கொடுங்காலூரில் நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

வந்தவாசி

கீழ்கொடுங்காலூரில் நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பிரசாதன சாலையில் உள்ள கடைக்காரர்கள் முன்பகுதி இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையிலிருந்து கீழ்நர்மா வரையிலான சுமார் 5 கி.மீ. தூர தார்ச்சாலையை ரூ.6.80 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையிலிருந்து கீழ்க்கொடுங்காலூர் திருவள்ளுவர் நகர் வரை இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த கால்வாயை ஒட்டிய சாலையோரம் கட்டியுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஆர்.தியாகராஜன், உதவிப் பொறியாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



Next Story