அஞ்சூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அஞ்சூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்ட அஞ்சூர் ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டிருந்தது.
அந்த சாலையின் குறுக்கே தனிநபர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்திருந்தார். இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன் கொடுத்த புகாரின் பேரில் வருவாய் துறையினர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், நேற்று நேரில் வந்து ஆக்கிரமிப்பை அகற்றினார்கள்.
இதையொட்டி செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story