நீர்நிலை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீர்நிலை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மாங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் மாரிச்செல்வம் என்பவர் நீர்நிலை பகுதிகள் மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நேற்று முன்தினம் மாங்காடு பகுதியில் உள்ள நீர் நிலை பகுதிகளான சுந்தரபாண்டி புதுக்குளம், மாங்காட்டான்குளம், தீர்த்தான்குளம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து இருந்ததை ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, மாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வடகாடு போலீசார் முன்னிலையில் அகற்றப்பட்டது. நேற்று மேய்ச்சல் புறம்போக்கு இடங்களில் இருந்த தென்னை மரங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.