வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யும் பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வள்ளிமலை

வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யும் பணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் இருந்து பொன்னை வரை சாலைகள் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களை மின் ஊழியர்களால் மாற்றி அமைக்கும் பணி சிறு சிறு தரைப்பாலங்கள் விரிவாக்கம் செய்து சாலைகளில் இரு பக்கங்களிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதற்கு சிமெண்டு ஜல்லி கலவைகள் போடப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் வள்ளிமலை கோட்டநத்தம் காந்தி சிலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story