24 வீடுகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


24 வீடுகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வடசேரியில் 24 வீடுகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடசேரி சுப்பையார் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று காலை சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் சுப்பையார்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அந்த பகுதியில் உள்ள 24 வீடுகள் முன்பு கட்டியிருந்த கூரைகள், தகர ஷீட்டுகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.


Next Story