தரகம்பட்டி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தரகம்பட்டி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

தரகம்பட்டி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கரூர்

கடவூர் தாலுகா தரகம்பட்டி கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழாவின் போது சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லும் போது சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மைலம்பட்டி-வையம்பட்டி மெயின் ரோடு மற்றும் குஜிலியம்பாறை மெயின் ரோட்டில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து கடவூர் தாசில்தார் முனிராஜ், கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமார், தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி ஆகியோர் தரகம்பட்டி கடைவீதியில் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றிக்கொள்ள அறிவுரை வழங்கினர். இதில் பெரும்பாலானோர் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அதிகாரிகள் அதிரடியாக பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story