சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை மண்டல துணை தாசில்தார் தங்கராசு மற்றும் கை.களத்தூர் போலீசார் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story