சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

திருவண்ணாமலையில் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் முன்னேற்பாடாக சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றும் பணி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் முன்னேற்பாடாக சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றும் பணி நடந்தது.

சித்ரா பவுர்ணமி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் ஒன்றாகும். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி நாள்ளிரவு நிறைவடைகின்றது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதி, உள் மாட வீதி மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டிகள், கடைகளின் முன்பு உள்ள தகர கொட்டகைகள் போன்றவை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அதிரடியாக அகற்றப்பட்டது.

தொடர்ந்து கிரிவல்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story