சோளிங்கர் கோவில் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சோளிங்கர் கோவில் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மாலை நேரங்களில் நான்கு மாட வீதியில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்தநிலையில் சுவாமி வீதிஉலா செல்வதற்கு ஏதுவாக பஜார் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மேற்பார்வையில் வருவாய்த்துறை உதவியுடன் ஆக்ரமிப்புகளை அகற்றினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story