நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியில் 12-வது வார்டு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள கொண்டநேரி கண்மாயின் நீர்நிலை புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பகுதியில் இருந்த ஒரு சில கட்டிடங்கள் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டது. நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை காலி செய்து கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வெளியேறவில்லை. இதனால் நேற்று நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. பணிகள் தொடங்கும் போது ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஏற்கனவே போதுமான அவகாசம் வழங்கப்பட்டதால் மீண்டும் அவகாசம் தர முடியாது என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு மக்கள் வசிக்காத வீடுகள் மற்றும் கட்டிடங்களை மட்டும் அகற்ற நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1 வீடு மட்டும் கட்டிடங்கள் அகற்றப்பட்டது.


Next Story