கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா பரனூர் கண்மாயில் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, ½ ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பின் போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story