மரத்தில் அடித்த ஆணிகள் அகற்றம்


மரத்தில் அடித்த ஆணிகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரத்தில் அடித்த ஆணிகள் அகற்றப்பட்டது

சிவகங்கை

காரைக்குடி

நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக பசுமை காப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காரைக்குடியில் பெரியார் சிலை 100 அடி சாலை அருகே மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் மீது சில தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆணி அடித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்த ஆணிகள் துருபிடித்து மரத்தில் உள்ள நாளங்கள் பாதிப்பு ஏற்பட்டு மரம் பட்டுப்போகின்றன. இதனால் மரக்கன்றுகளை நடுவது மட்டுமின்றி அதனை பாதுகாக்கும் நோக்கில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் கூறுகையில், மரங்களின் மீது ஆணிகள் அடித்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நமது உரிமை பாதுகாப்பு இயக்க நகர சட்டப்பிரிவு செயலாளர் முகமதுஆசிக் செய்திருந்தார். நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் நூர் முகமது, முத்து போஸ், சரவணன், சந்திரகுமார், பழனியப்பன், நாகராஜ், ரவி முகமது தர்ஷிகா, புவி ஸ்ரீ, மற்றும் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story