ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணி கடந்த 14-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நெல்லை டவுன் வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி பகுதிகளில் சாலையோரம் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கடைகள் மற்றும் அங்குள்ள கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள், பெயர் பலகைகள் போன்றவை அகற்றப்பட்டன. இந்த பணியில் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story