வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

வேலூர்

வேலூர்

வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

நடைபாதையில் ஆக்கிரமிப்புகள்

வேலூர் அண்ணாசாலை சாரதி மாளிகை பகுதியில் பலர் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். அதை அகற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். இந்தநிலையில் லாங்குபஜாரை ஒட்டியுள்ள பகுதியில் அதிகளவு நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். இதனால் அங்கு தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. கடைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனே அங்கிருந்து சென்றனர். மேலும் பலர் வாகனங்களை லாங்கு பஜாரில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். எனவே லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் லாங்கு பஜார் மார்க்கெட் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் தரை கடைகளை அப்புறப்படுத்தினர். சில பழக்கடை தள்ளுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்

நடைபாதையில் வைக்கப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எந்தவித காரணத்தைக் கொண்டும் நடைபாதையை ஆக்கிரமிக்கக்கூடாது, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. லாங்கு பஜாரில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதும் மீண்டும் அந்த இடத்தில் கடைகள் அமைப்பதும் வழக்கமான ஒன்று தான். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

--

---

Image1 File Name : 11018071.jpg

---

Image2 File Name : 11018072.jpg

----

Reporter : T. ALWIN_Staff Reporter Location : Vellore - VELLORE


Next Story