பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதுப்பிக்கும் பணி


பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதுப்பிக்கும் பணி
x

பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதுப்பிக்கும் பணி

தஞ்சாவூர்

பாபநாசம்

பாபநாசம் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

தண்டவாள பராமரிப்பு பணிகள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் உள்ள ெரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதையடுத்து காலையிலிருந்து ெரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த வழிதடத்தில் 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களும், 7-க்கு மேற்பட்ட பாசஞ்சர் ெரயில்களும் சென்று வருகிறது. ெரயில்வே இளநிலை பொறியாளர் பங்கஜ் பாண்டே தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ெரயில்வே தொழிலாளர்கள் புதிய தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாற்று வழியில் வாகனங்கள்

இதன் காரணமாக பாபநாசம் ெரயில்வே கேட் மூடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் கோபுராஜபுரம் கேட் மற்றும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டது. மேலும் பாபநாசம் சாலியமங்கலம் வழியாக செல்லும் அரசு பஸ்களும், மினி பஸ்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. காலையிலிருந்து மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் சிரமப்பட்டனர். மேலும் அவர்கள் தண்டவாளத்தின் குறுக்கே நடந்தே சென்றனர்.


Next Story