மேம்பாலத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம்
"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக தஞ்சை பெரிய கோவில் அருகே மேம்பாலத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது.
"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக தஞ்சை பெரிய கோவில் அருகே மேம்பாலத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது.
மேம்பாலம்
தஞ்சையில் உலக பிரசித்திப்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள், போக்குவரத்து வசதிக்காக பெரிய கோவில் அருகே மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
செடிகள்
இதனால் மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் மேம்பாலத்தில் உள்ள தூண்கள் மற்றும் சிறிய விரிசல்கள் இடையே செடிகள் வளர்ந்திருந்தன. இவை மரங்களாக வளர்ந்து மேம்பாலத்தின் உறுதி தன்மையை கேள்விகுறியாக்கும் சூழல் நிலவி வந்தது.
எனவே, செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர்.இதுகுறித்து செய்தி "தினத்தந்தி" நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அகற்றம்
இதன் எதிரொலியாக நேற்று பெரிய கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் வளர்ந்திருந்த செடிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.