பிரதமர் மோடியின் டிஜிட்டல் பேனர் அகற்றம்
சங்கரன்கோவிலில் பிரதமர் மோடியின் டிஜிட்டல் பேனர் அகற்றம்; 2 பேர் கைது
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவருடைய டிஜிட்டல் பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரை சிலர் அகற்றி உள்ளனர். அப்போது சிலருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதுகுறித்து பா.ஜனதா கட்சி நகர தலைவர் கணேசன் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் யாசின் மாலிக் (வயது 25), ஆசிக் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரசூல், சம்சுதீன் ஆகிய இருவரை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் அனுமதியின்றி டிஜிட்டர் பேனர் வைத்ததாக ஜமாத் கமிட்டி செயலாளர் நயினார் கொடுத்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார், பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பேனரை அகற்றுமாறு கூறிய நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்து அவதூறாக பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அனுமதியின்றி டிஜிட்டர் பேனர் வைத்ததாக சங்கரன்கோவில் டவுன் போலீசார், பா.ஜ.க. நிர்வாகிகள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.