சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவுபடி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி அறிவுறுத்தல்படி, திருத்துறைப்பூண்டி உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை, இளநிலை பொறியாளர் ரவி, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, நகரஅமைப்பு ஆய்வாளர் செந்தில் முருகன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நெடுஞ்சாலைக்கு சொந்தமான மழைநீர் வடிகாலின் மேற்பகுதிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இந்த பணியில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் அனைத்து செலவினங்களையும் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்தே வசூல் செய்யப்படும் என்றனர்.

1 More update

Next Story