சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மார்க்கெட் தெருவில் இருந்த பஸ் நிலையம் வரை முழுவதும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றிலும் ஏராளமான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிற்கு புகார் வந்தது. இதையடுத்து அரியலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் போலீசார் பாதுகாப்புடன் அண்ணா சிலையை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


Next Story