சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வளவனூர் பேரூராட்சியில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், கடை வீதி பகுதிகளில் உள்ள சாலையோர நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் தினந்தோறும் வளவனூர் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பலமுறை, வளவனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா அறிவுறுத்தலின்பேரில் செயல் அலுவலர் ஷேக்லத்தீப் மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று, வளவனூர் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளான பூக்கடைகள், பழக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை அகற்றினர். இதனால் அங்குள்ள சாலைகள் விசாலமாக காட்சியளித்தன. போக்குவரத்து நெரிசலும் ஓரளவு குறைந்து காணப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story