ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இரு கரைகளிலும் நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், நாராயணத்தோப்பு, போடிப்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, கோபாலபுரம் ஆற்றோரம், பச்சையம்மன் கோவில் ஆற்றோரம், சுண்ணாம்புப்பேட்டை ஆற்றோரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததது. அதில் கடந்த ஆண்டு நீர்வளத்துறை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றினார்கள்.
புவனேஸ்வரிபேட்டை, போடிப்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே நகர் பகுதியில் 130 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில், குடியாத்தம் உதவி கோட்ட செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று 40 வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள ஆக்கிரப்பு வீடுகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.