மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாற்றங்கரையோரம் உள்ள சாதிக் பாஷா நகரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story