கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெய ரவிவர்மா, ஆட்டாங்குடியை சேர்ந்த கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சூா்யா ஆகிய 3 பேரை கடந்த 18-ந் தேதி இரவு தனிப்படை போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக வல்லாத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சா, கார், 4 செல்போன்கள், ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைதான கிராம நிர்வாக அலுவலர் ஜெய ரவிவர்மாவை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் இன்று உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story