மின்பாதையில் இடையூறாகஇருந்த மரங்கள் அகற்றம்
நாங்கூர் பகுதியில் மின்பாதையில் இடையூறாகஇருந்த மரங்கள் அகற்றம்
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே உள்ள நாங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மேலச்சாலை, கீழச்சாலை, திருவாளி உள்ளிட்ட கிராமங்களில் மின் பாதையில் மரங்கள் அடர்ந்து வளர்ந்தும், சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும் காணப்பட்டது. இதனால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு புகார்கள் வந்ததை அடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில், ஆக்க முகவர் குணசேகரன், மின்பாதை ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தாஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 37 இடங்களில் மின் பாதையில் இடையூறாக இருந்த மரங்களை அகற்றினர். மேலும் சாய்ந்த மின்கம்பங்களையும் சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story