நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீா் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதனை மீட்டெடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தினை பெருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் மேற்கு கிராமத்தில் நீர் வரத்து வாரியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததை நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறை முன்னிலையில் நீர் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு நீர் வரத்து வாரி ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்றப்பட்டது. மேலும் இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு பொதுமக்கள் தாமாக முன்வர வேண்டும் என நீர்வள ஆதாரத்துறையின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 More update

Next Story