விளம்பர பேனர்கள் அகற்றம்
நெல்லையில் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.
திருநெல்வேலி
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின்பேரில், நெல்லை மாநகர பகுதியில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது.
நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து வழுக்கோடை சாலை, சேரன்மகாதேவி சாலை மற்றும் காட்சி மண்டபம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story