கடந்தை வண்டுகள் தீ வைத்து அகற்றம்


கடந்தை வண்டுகள் தீ வைத்து அகற்றம்
x

பாபநாசம் நீர்மின் நிலைய கட்டிடத்தில் கடந்தை வண்டுகள் தீ வைத்து அகற்றப்பட்டன.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் நீர்மின்நிலையத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தின் உட்பகுதியில் கடந்தை வண்டுகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. இதனால் பணி நிமித்தமாக அக்கட்டிடத்திற்குள் செல்பவர்களுக்கு கடந்தை வண்டுகளால் பிரச்சினை ஏற்பட்டதால், இதுகுறித்து அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை போக்குவரத்து அலுவலர் நாகநாதன், சிறப்பு நிலைய அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பந்தம் கொளுத்தி அங்கிருந்த கடந்தை வண்டுகளை அப்புறப்படுத்தினர்.

1 More update

Next Story