குப்பை மறுசுழற்சி எந்திரத்தை அகற்ற வேண்டும்


குப்பை மறுசுழற்சி எந்திரத்தை அகற்ற வேண்டும்
x

திருச்சுழி அருகே பள்ளி வளாகத்தில் செயல்படும் குப்பை மறுசுழற்சி எந்திரத்தை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


திருச்சுழி அருகே பள்ளி வளாகத்தில் செயல்படும் குப்பை மறுசுழற்சி எந்திரத்தை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் மறுசுழற்சி எந்திரம்

திருச்சுழி யூனியன் பள்ளிமடம் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி திலகம் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பள்ளி வளாகத்தில் ஓட்டு கட்டிடம் உள்ள ஒரு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் மற்றொரு பகுதியில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து மதிய உணவு உண்ணும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓட்டு கட்டிடத்தில் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் எந்திரம் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாக கட்டிடத்தில் இந்த எந்திரம் செயல்பட அனுமதிக்காமல் எந்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொழில்பூங்கா

சாத்தூர் தாலுகாவில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் ஏற்கனவே 1,500 ஏக்கர் நிலம் தொழில் பூங்காவுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் கிராம மக்களுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென கோரியுள்ளனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணன் அல்லம்பட்டி பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் குடிசையில் வாழ்ந்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.


Next Story