ரெண்டாடி ஏரி நிரம்பி வழிந்தது


ரெண்டாடி ஏரி நிரம்பி வழிந்தது
x

ரெண்டாடி ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்தது. இதன் காரணமாக பொன்னை ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது. அணைக்கட்டில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் தண்ணீர் வரத்து உள்ளதால் ரெண்டாடி பெரிய ஏரி நிரம்பி கடைவாசல் வழியே தண்ணீர் சென்றது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தண்ணீர் வரத்தை கண்காணித்து அடுத்து, அடுத்துள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறதா, ஏரியின் கரை மற்றும் கடைவாசல் பகுதிகள் பலமாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும், என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story