ரெங்கநாத பெருமாள் கோவில் குடமுழுக்கு


ரெங்கநாத பெருமாள் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:45 PM GMT)

வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரெங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாக சாலை பூஜைகள், திருமஞ்சனம், சங்கல்பம் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story