ரூ.45.54 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதி திறப்பு


ரூ.45.54 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட  மகளிர் விடுதி திறப்பு
x

நெல்லையில் ரூ.45.54 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதி திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லையில் ரூ.45.54 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதி திறக்கப்பட்டது.

மகளிர் விடுதி

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தம் காரணமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கு குறைந்த விலையில் தரமான பாதுகாப்புடன் விடுதிகள் அவசியம் ஆகும். இதனால் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய விடுதிகளை உருவாக்கவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

திறப்பு விழா

அந்த நிறுவனம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில் ரூ.45.54 லட்சம் மதிப்பில் மகளிர் விடுதி புதுப்பிக்கப்பட்டது. இதனை நேற்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, பொன்னுமுத்து, விடுதி மேலாளர் மாலா, கவுன்சிலர்கள் சுந்தர், வில்சன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story