புதுப்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி திறப்பு


புதுப்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி திறப்பு
x

அரக்கோணம்- திருவள்ளூர் ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி திறப்பு விழா நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கவும் மோசூர் ரோட்டில் அரசு ஐ.டி.ஐ. அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனைச்சாவடி பகுதியில் இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இதனையடுத்து சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா, அதிக வெளிச்சம் தரும் வகையிலான விளக்கு மற்றும் அடிப்படை வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி திறப்பு விழா நடைபெற்றது. அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் சாலோமன் ராஜா, பாரதி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story