ரூ.33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர்கள் பூங்கா


ரூ.33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர்கள் பூங்கா
x

ரூ.33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர்கள் பூங்கா

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்

சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் ரூ.33 லட்சத்தில் சிறுவர்கள் பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

சுற்றுலா தலம்

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே ரபேந்திரராஜன்பட்டினத்தில் மனோரா சுற்றுலா தலம் அமைந்துள்ளது.

கி.பி.814-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததின் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவு சின்னமாக கட்டப்பட்டது தான் இந்த மனோரா.

பேராவூரணி-பட்டுக்கோட்டை போன்ற பெரிய நகரப் பகுதிகளின் மைய பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் இந்த மனோரா அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினரும் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

சிறுவர்கள் பூங்கா

இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சிறுவர் உள்பட பல இடங்கள் சேதமடைந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான மராமத்து பணிகள் நடந்தன. அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில், சுற்றுலா மையத்தில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதேபோல, ரூ. 49.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் படகுசவாரி தளம், ரூ.44 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையம் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story