மகாபலீஸ்வரர் கோவில் திருப்பணி


மகாபலீஸ்வரர் கோவில் திருப்பணி
x

மகாபலீஸ்வரர் கோவில் திருப்பணி தொடங்கியது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனான மகாபலீஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தக் கோவில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக் கொட்டகையில் சாமி, அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலை புனரமைக்க முடிவு செய்து அதற்கான திருப்பணி நேற்று தொடங்கியது. இதனையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, பஞ்சாட்சர ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று பூர்ணாகுதி நடைபெற்று கடங்கள் புறப்பட்டது. பின்னர் திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை வேலப்ப தம்பிரான் சாமிகள் முன்னிலையில் திருப்பணி தொடங்கியது.

இதில், மாவட்ட பிராமணர் சங்கத் தலைவர் பாபு மற்றும் பா.ஜ.க., இந்து மகா சபாவினர், உபயதாரர்கள், ஊராட்சித் தலைவர் கயல்விழி சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர் ராம.நிரஞ்சன், பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் முட்டம் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story