நடைபயிற்சி பூங்காவை சீரமைக்கும் பணி


நடைபயிற்சி பூங்காவை சீரமைக்கும் பணி
x

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடைபயிற்சி பூங்காவை சீரமைக்கும் பணியை கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுமக்கள், காலை- மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக இங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதராக உள்ளதாகவும், மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் நடைபயிற்சி மேற்கொள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எனவே இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் பூங்காவில் நகராட்சி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் செடி, கொடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீண்ட காலத்திற்கு பயன்தரக்கூடிய நிழல் தரும் வகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படியும், தினந்தோறும் பூங்காவில் தூய்மைப்பணி மேற்கொள்ளவும், காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவை திறந்து வைக்கும்படியும், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர்செய்யுமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெரியசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story