சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சீரமைப்பு பணிகள்


சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சீரமைப்பு பணிகள்
x

சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.

ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு

சீர்காழியில் மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவர் மற்றும் அருணாச்சல கவிராயர் உள்ளிட்ட 3 தமிழிசை பெரியவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழக அரசால் தமிழிசை மூவர் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்திற்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மணிமண்டபம் சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மணிமண்டபத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விரைந்து மணிமண்டப பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story