கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு


கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

12 வாரங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பேரூர்

12 வாரங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை குற்றாலம்

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தும், அங்குள்ள தொங்கு பாலத்தில் இயற்கையை ரசித்தபடி நடந்து சென்றும் குதூகலம் அடைகின்றனர்.

கோவை குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தனி வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு

இதற்கிடையில் கோவை குற்றாலத்தில் அவ்வப் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதை வனத்துறையினர் கண்காணித்து, நீர்வரத்து அதிகரித்து இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பார்கள். அதன்படி கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மகிழ்ச்சி

இந்த நிலையில் மழைப்பொழிவு குறைந்ததால், அருவியில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் 12 வாரங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்ததோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, இயற்கை எழில் சூழ்ந்த கோவை குற்றாலத்தில் குளிப்பது மிகவும் குதூகலமாக உள்ளது. இதற்கு தடை விதித்து இருந்தது வருத்தமாக இருந்தது. தற்போது தடை விலக்கப்பட்டு உள்ளதால், மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வர உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்றனர்.


Next Story