பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x

பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கண்டித்தும், புதிய கட்டிடம் கட்டித்தரக் கோரியும் வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

மாநிலம் முழுவதும் ஏராளமான அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் இந்த லட்சணத்தில்தான் உள்ளன. கல்வித் துறைக்கு ஆண்டுக்கு ரூ.37000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், பள்ளிக் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்தும், இடிந்துவிழும் நிலையிலும் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.

தமிழகம் முழுவதும் மழை வலுத்துள்ள சூழலில், சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, உடனடியாக பள்ளிக் கட்டிடங்களைச் சீரமைக்கவும், புதிய கட்டிடங்களைக் கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Next Story