மின்மாற்றியில் பழுது: குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


மின்மாற்றியில் பழுது: குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x

அறந்தாங்கி அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே பூவற்றக்குடி ஊராட்சியில் பூவை மாநகர் பகுதியில் ஆவணத்தான்கோட்டை மின்வாரியத்திற்குட்பட்ட மின்மாற்றியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பணிகள் இதுவரை முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரிவர மின்வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும், மின் மோட்டார்கள் இயங்காததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் புதிய மின்மாற்றி மாற்றி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்வினியோகம் செய்வதுடன், குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story