250 உடைந்த நாற்காலிகள், மேஜைகள் சீரமைப்பு
காட்பாடி அரசு பள்ளியில் 250 உடைந்த நாற்காலிகள், மேஜைகளை தச்சு தொழிலாளர்கள் இலவசமாக சீரமைத்தனர்.
வேலூர்
காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சில நாற்காலிகள், மேஜைகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. விரைவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்க இருப்பதால் இவற்றை சீரமைக்க வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் சங்கம் மற்றும் காட்பாடி கிளை ஆகியவை இணைந்து செய்ய முன்வந்தனர்.
அதன்படி அவர்கள் சீரமைப்பதற்கான பொருட்களை ரூ.20 ஆயிரத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து 35 தொழிலாளர்கள் இணைந்து 250 நாற்காலிகள், மேஜைகளை ஒரு நாள் முழுவதும் வேலை செய்து இலவசமாக சீரமைத்துக் கொடுத்தனர். அவர்களின் சேவையை ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story