உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
பனப்பாக்கத்தில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
பனப்பாக்கம் பேரூராட்சி, அண்ணா நகரில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக குடிநீர் வெளியேறி பனப்பாக்கம்-ஒச்சேரி சாலையில் தேங்கிவந்தது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடைந்த குழாயை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் குமார் உடைந்த குழாயை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டார். பழுதடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் தொடங்கியது.
Related Tags :
Next Story