நெய்குப்பை கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு


நெய்குப்பை கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நெய்குப்பை கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை மின்வாரியத்தினர் சீரமைத்தனர்.

மயிலாடுதுறை


'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நெய்குப்பை கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை மின்வாரியத்தினர் சீரமைத்தனர்.

தாழ்வாக சென்ற மின்கம்பிகள்

மயிலாடுதுறை அருகே வழுவூர்-நெய்குப்பை கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நிலத்தின் வழியாக செல்லும் மின்சார கம்பி ஆள்தொடும் அளவில் தாழ்ந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இதுகுறித்த செய்தி நேற்று 'தினத்தந்தி' நாளிதழிலில் வெளியானது. அதன் எதிரொலியாக மயிலாடுதுறை துணைமின் நிலையத்திற்கு கட்டுப்பட்ட இந்த பகுதியில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சீரமைத்தனர்

அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பிகளை மின்ஊழியர்கள் சீரமைத்தனர். இதனால், மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், பணியை மேற்கொண்ட மின் ஊழியர்களுக்கும், தங்கள் கோரிக்கையை ஏற்று அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற 'தினத்தந்தி' நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story