டிரான்ஸ்பார்மர் வெடித்து வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுது


டிரான்ஸ்பார்மர் வெடித்து வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுது
x

திசையன்விளையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதானது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை பத்திரபதிவு அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதில் இருந்து மின் இணைப்பு பெற்ற வீடுகளில் உள்ள மின்மீட்டர், மின்விசிறிகள், தொலைகாட்சி பெட்டிகள், பிரிட்ஜிகள், ஏ.சி.கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது. அதை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story