சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைப்பு


தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழியில், சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது

மயிலாடுதுறை

சீர்காழி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீர்காழியில், சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சீர்காழி நகராட்சியில் பிச்சைக்காரன் விடுதிக்கு செல்லும் சாலையில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இந்த சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் பல மாதங்களாக மிகவும் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது.

இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எப்போது மின்கம்பம் சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

சீரமைப்பு

இதுகுறித்த செய்தி கடந்த 10-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் பிரசுரம் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அதிகாரிகள், சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்பின்னர் மின்வாாயி பணியாளர்கள் உதவியுடன் சாய்ந்த மின் கம்பத்தை சரி செய்து தாழ்வாக சென்ற மின்கம்பியை சீரமைத்தனர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story