3 ரோடு சந்திப்பில் மோசமான சாலை
3 ரோடு சந்திப்பில் மோசமான சாலை
அவினாசி
அவினாசி ஒன்றியம் கணியம்பூண்டியில் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. திருப்பூருக்கும் அவினாசிக்கும் மிக அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் தினசரி போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் மற்றும் தனியார் பஸ்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்திலும் பள்ளி வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கணியாம்பூண்டி மாரியம்மன் கோவில் அருகில் 3 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து மாதகணக்கில் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது. இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தெரியாமல் அந்த இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர். மேலும் கணியாம்பூண்டியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை சாக்கடை சுத்தம் செய்வதில்லை. இதனால் குழந்தைகள் உள்ளிட்ட முதியோர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், கோரிக்கை மனு கொடுத்தும் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-