பழுதான மின்விளக்குளை சீரமைக்கும் பணி

பழுதான மின்விளக்குளை சீரமைக்கும் பணி
கிணத்துக்கடவு
கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு கிணத்துக்கடவில் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் 1,000 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான விளக்குகள் பழுதடைந்ததால், இரவு நேரத்தில் மேம்பால பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்தநிலையில் பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்யும் பணி மின்வாரிய ஊழியர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு ஊருக்குள் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் ஏராளமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை சரிவர ஒளிருவதில்லை. தற்போது மின்விளக்குகளை பழுது பார்க்கும் பணி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவற்றை தொடர்ந்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






