கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு


கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
x

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொடுமுடி அருகே வடுகனூரில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் போடப்பட்டு இருந்த கான்கிரீட் கரைகள் உடைந்து சிதிலமடைந்தன. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டன.

இந்த பணிகளை நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் சிவலிங்கம், ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகளை அதிகாரிகள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story