பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மின்மோட்டார் பழுது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் திருமயிலாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் திருமயிலாடி கிராமத்தில் 14, 15-வது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்ததால் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் கடந்த 1 ஆண்டாக மேற்கண்ட பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் தட்டுப்பாடு

இதன் காரணம் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பழுதடைந்த மின்மாற்றி சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 25-ந்தேதி வெளி வந்தது. இதன் எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, மற்றும் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், ஊராட்சித் துணைத் தலைவர் சிவபிரகாசம் ஆகியோர் திருமயிலாடி கிராமத்திற்கு வந்து பழுதடைந்த மின்மோட்டாரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நடவடிக்கை

இதை தொடர்ந்து புதிய மின் மோட்டார் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தனர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story