மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் இடங்களில் ரூ.5 கோடியில் குடிநீர் குழாய்கள் மாற்றம்


மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் இடங்களில் ரூ.5 கோடியில் குடிநீர் குழாய்கள் மாற்றம்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் இடங்களில் ரூ.5 கோடியில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் கூறி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் இடங்களில் ரூ.5 கோடியில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் கூறினார்கள்.

மேற்கு புறவழிச்சாலை

பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்திமில் அருகில் தொடங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

தற்போது 3© மீட்டர் நீளமுள்ள சாலை 10 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. மேலும் சிறு பாலங்களும் கட்டப்படுகின்றன. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி ஜல்லி கற்கள் போடப்பட்டன. ஆனால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிதாக குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (திட்டங்கள்) கூறியதாவது:-

ரூ.5 கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக முதலில் ரூ.50 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்துக்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு நிலம் கையகப்படுத்த, சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய திருத்தி அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஆனதால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆனது. தற்போது ரூ.73 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தாளக்கரை, ஜமீன்ஊத்துக்குளி கிராமங்களில் நிலம் கையகப்படுத்த ரூ.15 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டதும் அந்த கிராமங்களில் பணிகள் தொடங்கப்படும். இதற்கிடையில் மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படும் ஜமீன்ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதிய குடிநீர் குழாய்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. டெண்டர் விடப்பட்டதும் சாலையோரத்தில் குழாய்கள் மாற்றி அமைக்கப்படும். குழாய் மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்ததும் மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story